Header Ads

  • சற்று முன்

    திருநெல்வேலியில் மாநகராட்சி பிடித்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்ட பாஜக நிர்வாகி கைது

    திருநெல்வேலி மாநகராட்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த சுமார் 10  மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அடைத்து வைத்தனர். பின்னர் அந்த மாடுகளை ஏலம் விட்டனர்.ஏலத்தில் 1.40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு மாட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட பா.ஜ.க தலைவர் தயாசங்கர் தலைமையிலான பா.ஜ.க.,வினர் மாநகராட்சி ஊழியர் பிடித்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதையடுத்து அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பா.ஜ.க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது காவல்துறை அவரை கைது செய்துள்ளது. பா.ஜ.க தலைவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதானவர்களை டிசம்பர் 2 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கைதானவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad