கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்த செய்த 4 பேர் கைது
கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மதுக்கரை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிஅருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படியில் போலீசார் தனிப்படை விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கே நின்றிருந்த 4 பேரை விசாரித்ததில் அவர்களிடம் 6கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது .
4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை