• சற்று முன்

    ராணிப்பேட்டையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பு முதல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பழைய)  வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

    இப்பேரணி, குழந்தை திருமணம், குடும்ப வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்துதல்,  பாலியல் தொந்தரவு உட்பட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை  குறித்தும், அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதாரம் முதலியவை  வழங்குதல் குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    மேலும் இப்பேரணியில்  துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு (ராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் கோடீஸ்வரன் (பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு) , ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் காண்டீபன், உதவி காவலர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள்   ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad