ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றங் கரையோரம் உள்ள காட்டுப் பகுதியில் அழகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்குற்றவாளி கைது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றங் கரையோரம் உள்ள காட்டுப் பகுதியில் அழகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் அடையாளம் காணப்பட்டது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, வாலாஜாபேட்டை அடுத்த அணைக்கட்டு தடுப்பணை கால்வாய் அருகே கரையோரம் உள்ள காப்பு காட்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது காட்டுப்பகுதி உள்ள ஓடையில் பெண் சடலம் அழகிய நிலையில் மிதுப்பதை கண்டனர்.
உடனடியாக அந்த சடலத்தை மீட்ட போலீசார் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மீட்கப்பட்ட பெண் சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நீக்கப்பட்ட பெண் சடலம் காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி ராமாபுரம் பகுதியில் சேர்ந்த ரேஷ்மா லதா என்பது தெரியவந்தது. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கோபி என்பவருடன் திருமணாகி பிரசவத்திற்காக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீடான கடப்பேரி ராமாபுரம் பகுதிக்கு வந்துள்ளார். இவருக்கு ஐந்து மாத பெண் குழந்தையுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மகப்பேறு காலத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகையை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பெற்று வருவதாக கூறிவிட்டு வந்த ரேஷ்மா லதா அதன்பின் வீடு திரும்பவில்லை இதன் காரணமாக அவரது உறவினர்கள் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட வாலாஜாபேட்டை காவல் துறையினர் ரேஷ்மா லதாவின் முன்னாள் காதலன் கீழ் விசாரம் அடுத்த ராசாத்திபுரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவர் அணைக்கட்டு தடுப்பணை காப்புக்காடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் கடந்த 22ம் தேதி ரேஷ்மா லதாவை அழைத்துச் செல்லும் அதன் பின்பு 40 நிமிடங்களில் குமரன் மீண்டும் தனியாக இரு சக்கர வாகனத்தில் வருவதும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது மேலும் அந்த பதிவை கைப்பற்றிய போலீசார் பெங்களூர் பகுதியில் தலைமறைவாக மறைந்திருந்த குமரனை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குமரனிடம் இது குறித்து விசாரணை மேற்கண்ட போது குமரன் மற்றும் ரேஷ்மலாதா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்ததாகவும் திருமணத்திற்கு பிறகு இந்த காதல் தொடர்ந்து வந்ததாகவும் கூறிய குமரன் கடந்த 22 ஆம் தேதி ரேஷ்மாவை பார்க்க வேண்டும் என செல்போனில் அழைத்ததாகவும் பிறகு இருசக்கர வாகனத்தில் காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறிய குமரன் அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ரேஷ்மாவை அடித்து மற்றும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ரேஷ்மா கழுத்தில் அணிந்து இருந்த தாலி சரடு உள்ளிட்ட தங்க நகை மற்றும் கால் கொலுசு ஆகியவை எடுத்துச் சென்று ஆற்காடு பகுதியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து ரூபாய் 88 ஆயிரம் பெற்றுக் கொண்டு பெங்களூர் பகுதிக்கு சென்றதாக கூறினார். இதனை அடுத்து அவர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்







கருத்துகள் இல்லை