Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் மகளிர் சுய உதவிக் குழு வளர்ச்சியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு.!


    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் ஐந்து லட்ச ரூபாய் நிதியானது வழங்கப்பட்டுள்ளது. நிதியைப் பெற்று பயனடைந்து வரும் மகளிர் கய உதவி குழுவினரின் பணிகளை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். 


    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் ஐந்து லட்ச ரூபாய் நிதியானது வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தையல் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவி சார்ந்தபெண்களைக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் பெறப்பட்டு ஆடைகள் பைகள் கையுறைகள்மாஸ்க் உள்ளிட்டவைகளை உற்பத்திசெய்துமகளிர் சுயஉதவிகளை சார்ந்த குழுவினர் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து மேற்கொண்டு வரும் பணிகளின் மூலம் பெறப்பட்டு வரும் லாபங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள், உற்பத்தி பெறுவதற்கான செலவின தொகைகள் உள்ளிட்டவைகளை குறித்து மகளிர் சுய உதவி குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் நடந்துவரும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் உற்பத்தி மற்றும் குழுக்களின் வளர்ச்சிகளை பார்வையிட்டார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad