Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே இரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய தனியார் பேருந்து! ஜேசிபி இயந்திரத்தின் மூலம்அப்புறப்படுத்தினர்

    திருப்பத்தூர் அருகே இரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய தனியார் பேருந்து! ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இரும்பு சங்கிலியால் கட்டி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினர்

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் வெளியேற முடியாமல் அங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் சாலையின் நடுவே TMS பள்ளி அருகே உள்ள இரயில்வே தரை பாலத்தில் சுமார் 4 அடிக்கும் மேலாக மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
    அப்போது தரை பாலத்தின் வழியாக தண்ணீரை கடக்க முயன்ற தனியார் பேருந்து நீரில் சிக்கியதால் நீண்ட நேரம் பொதுமக்கள் தரைப் பாலத்தை கடக்க முடியாமல் அவதியுற்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பேருந்தின் முன்புறம் இரும்பு சங்கிலியால் கட்டி இழுத்தனர்   அதன் பின்பு தரைப் பாலத்தில் இருந்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : ரூபி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad