Header Ads

  • சற்று முன்

    சனவெளி அரசு பள்ளியில் தேசிய சட்ட சேவைகள் தினம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது

    ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, சனவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவும், சனவெளி அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து இன்று தேசிய சட்ட சேவைகள் தினம் என்பதால் பள்ளி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில்  முதுகலை ஆசிரியர் மெசியானந்தி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்புரையாக திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனிஷ்குமார் திருவாடனை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி மனிஷ்குமார் மாணவ மாணவிகளிடம்  அடிப்படை சட்டம் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், பெண்களுக்கு சட்டம் எந்த வகையில் பாதுகாப்பாக உள்ளது, மற்றும் போக்சோ சட்டத்தில் குழந்தைகளை பாதுக்கும் விதம் பற்றியும், குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது பற்றி தெரிந்தவர்கள் அது பற்றி புகார் கொடுக்காமலோ அல்லது சம்பவம் பற்றி தெரிவிக்காமலோ இருந்தாலே அது குற்றம் என்றும், சம்பவம் பற்றி கூறுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்களின் பெயர் முகவரி, அடையாளங்கள் கூட தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்படும் என்பதை பற்றியும் அடிப்படை கல்வி உரிமை பற்றியும் எடுத்து கூறினார்.

    இந்நிகழ்வில் முதுகலை ஆசிரியர் தங்கபாண்டியன் நன்றியுரையாற்றினார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர் மற்றும் சட்ட தன்னார்வளர்கள் செய்திருந்தார்கள்.

    திருவாடானை தாலுகா நிருபர் L.V.ஆனந்த் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad