Header Ads

  • சற்று முன்

    நவ., 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது; கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சந்திர கிரகணம் வருகிற நவ., 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நடை சாத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி பூஜை சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று கோவில் நடை காலை 09.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மன்-சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள்அடைக்கப்பட்டு நடை  சாத்தபடுவதால் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அன்றைய தினம் மத்திம காலத்தில் மாலை 04.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பின் சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். இரவு 07.00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பின் இரவு 07.30 மணிக்கு இரவு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad