வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் 55-வது நூலக வார விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் கழிஞ்சூர் மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 55-வது நூலக வார விழா 15.11.2022 காலை 9 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்புரையாற்றினார் பள்ளியின் தலைமையாசிரியை செல்விமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் துணை ஆட்சியர் பி.சுமதி 50 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். தற்போது காட்பாடி ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் நூலகம் இருப்பதால் மாணவர்கள் தவறாமல் நூலகத்திற்கு வருகை நூல்களை படித்து பயன்பெற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.எஸ்.சிவ்வடிவு, ஆர்.விஜயகுமாரி, ஆறுமுகம், உள்ளிட்டோர் பேசினர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை