கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து- பெண் ஒருவர் பலி 3 பேர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள துளசிப்பட்டியில் தனியார் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.குளத்தூர் பனையூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி மல்லிகா( வயது 55). இவர் தனது மகன் மற்றும் மகளுடன் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. துளசிப்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணித்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதபமாக பலியானார். ஆட்டோ ஓட்டுனர் உள்பட மூவர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் விளாத்திகுளம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மல்லிகா உடல் நலம் குறைவு காரணமாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை