Header Ads

  • சற்று முன்

    செம்மொழி குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 119 ஆண்டு நினைவு தினம்

    செம்மொழி குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் பிறந்தா நாளை செம்மொழி தினமாக அறிவிக்கவும். பரிதிமாற்கலைஞரின் அரிய நூல்களை மதுரை கலைஞர் நூலகத்திற்கு நன்றி கடனாக அளிக்க தயாராக உள்ளோம் -பரிதிமாற்கலைஞர் பேரன்- கோவிந்தன்

    தமிழ் மொழியை செம்மொழியாக வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் 119 ஆண்டு நினைவு தினம். 



    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரியை சேர்ந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. தமிழ்மொழி பற்றால் தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றி ஏராளமான தமிழ் நூல்கள் இயற்றினார்.


    தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர்.வி ளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை வருவாய் கோட்டாச்சியர் சுகி பிரேமலா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் மண்டல தலைவர் ஸ்வேதா விமல், அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதி MLA ராஜன் செல்லப்பா பரிதிமாற்கலைஞருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.பரிதிமாற் கலைஞரின் மகன் வழி பேரனான பேராசிரியர் கோவிந்தன்

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad