புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட புதிய வீடு - கோட்டாச்சியர் மகாலட்சுமி திறந்த வைத்தார்...
2019 ல் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியன் உயிரிழந்தார்..
இந்நிலையில் அவரது கிருஷ்ணவேணி குடும்பத்திற்கு கிரடாய் பில்டர்ஸ் சார்பில் கயத்தார் ஜின்னா நகர் பகுதியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.. இந்நிகழ்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி மற்றும் கிரடாய் பில்டர்ஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து சாவியை உயிரிழந்த சிஆர்பி எப் சுப்பிரமணி மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார்
கருத்துகள் இல்லை