சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு சார்பாக சபை கூட்டம் கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமையில் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் 13 வது வார்டில் சபை கூட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு எம் வி எம் கலைவாணி பள்ளி நிர்வாகியும் 13 வது வார்டு கவுன்சிலருமான திருமதி வள்ளி மயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் 13வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் இதில் 13 வது வார்டில் செய்ய வேண்டிய பணிகள் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகள் ஆகியவை குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது பின்பு 13வது வார்டில் பேரூராட்சி சார்பில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையாவிடம் எடுத்துக் கூறினார் இதற்கு பதில் அளித்த கவுன்சிலர் வள்ளிமயில் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும்.உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை