• சற்று முன்

    மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்

    மதுரை மாவட்டம்  சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் இணைப்பு சாலையில் ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. இதற்காக பாலத்திற்கு அடியில் சென்ற கால்வாய்கள் இடிக்கப்பட்டிருந்தது.

    இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு தினகளாக பெய்து வரும் கனமழை காரணமாக சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. மேலும் கால்வாய் இடிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வயல்களில் கடல் போல் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளதுஇதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் இது குறித்து விவசாயிகள் கூறும் போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக.அடுத்தடுத்து ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் பால வேலைகள் தொடங்கும் போது மழைக்காலமாக இருப்பதாகவும் ஆகையால் தற்போது இந்த வேலைகளை தொடங்க வேண்டாம் என்றும் மேற்கொண்டு தொடங்கினால் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கிராமத்தின் சார்பாக கேட்டுக் கொண்டதாகவும் இது எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வேலைகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால் தற்போது பெய்த கன மழைக்கு வயல்களில் தண்ணீர் தேங்கி நடவு செய்த நெல்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும் இதற்கு பொறுப்பில்லாமல் சாலை பணிகளை செய்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்

    மேலும் மதுரையிலிருந்து மேலக்கால் நாராயணபுரம் ஊத்துக்குளி வழியாக சோழவந்தான்செல்லும் அரசு  பேருந்துகளின் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதால் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad