• சற்று முன்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டாட்சியர் லோகநாதன், சிவகாசி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிவகாசியில் உள்ள பெரும்பாலான சாலைப் பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிவதாலும் விபத்துகள் நடந்து வருகிறது. சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நகரின் மையப்பகுதியில் உள்ள சிவன் கோவிலைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் சிவகாசி நகர் பகுதிகளிலும் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்பு, மீண்டும் அங்கு ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலம் துவங்க உள்ள நிலையில், நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாராபட்சம் இல்லாமல் முழுமையாக அகற்ற வேண்டும் என்று பேசினார். இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad