Header Ads

  • சற்று முன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா: 9-ம் நாளான இன்று மீனாட்சி அம்மன் சிவபூசை திருக்கோல காட்சி

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதமும் விழாக்கள் கொண்டாடப்படும். அதிலும் நவராத்திரி உற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. நவராத்திரி உற்சவ விழா செப்டம்பா் 26-ஆம்  கோலாகலமாக துவங்கிய. இந்த விழா அக்டோபா் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  9-ம் நாள் விழாவான இன்று மீனாட்சியம்மன் மீனாட்சி அம்மன் சிவபூசை திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

    நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மன் மூலவர் சன்னிதியில்  அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில்   (உற்சவர்) அலங்காரத்தில் எழுத்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டது. 

    நவராத்திரி விழாவையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளபடி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பக்தர்கள் உபயமாக வழங்கிய கொலு அலங்கார பொம்மைகள்  சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர். திரளான பக்தர்கள் அம்மனையும், சுவாமியை தரிசனம் செய்து கொலு வையும் பார்த்து ரசித்து சென்றனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கோபுரம் மற்றும் கோவில் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தன.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad