மாமியார் அணியா!, மருமகள் அணியா! திருப்பரங்குன்றம் சட்டத்தேருக்கு வடம் பிடித்து இழுத்து வந்த பெண்களை நகைச்சுவையுடன் ஊக்குவித்த காவலர் மணிமாறன்
கந்தசஷ்டி உற்சவ விழா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சட்டத்தேர் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தேரை ஆயிரக்கணக்கான பெண்கள் இருபுறமும் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கிரிவலப் பாதையை முழுவதும் சுற்றி வருவதால் பெண்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் மணிமாறன் இருபுறமும் இழுக்கும் பெண்களை மாமியார் அணி, மருமகளணி என பிரித்து அவர்களை உற்சாக படுத்தி போட்டி போட்டு தேரை இழுக்க வைத்தார். காவலர் மணிமாறனின் இந்த நகைச்சுவையான செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை