Header Ads

  • சற்று முன்

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளாக சட்டத்தரோட்டம் நடைபெற்றது




    அரோகரா கோஷத்துடன் பெண்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளுல் முதல் படைவீடான  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது . இதனை தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி சூரபத்மனை வதம் செய்து அழிக்க கோவர்த்தன அம்பிக்கையிடமிருந்து வேல் வாங்கும் விழாவும் அடுத்ததாக நேற்று சூரனை வதம் செய்யும் சூரசம்கார லீலை கோவில் எதிரே உள்ள சொக்கநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக இன்று கோவிலில் இருந்து தங்கமயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி தேவசேனா இருவரும் சட்டத்தேரில் புறப்பட்டு பெரிய ரதவீதி, கீழ ரத வீதி, மேலரதவீதி வழியாக கிரிவலம் வந்து  மீண்டும் சன்னதி தெருவழியாக சட்டத் தேர் திருக்கோயில் சென்றடைந்தது.

    சட்டத்தேரோட்ட நிகழ்வில் அரோகரா கோஷத்துடன் பெண்கள் தேரை இழுந்து வளம் வந்தனர். கடந்த வருடம் தேதி  கிரிவலப்பாதை வரும்போது மின் வயரில் சிக்கி விபத்துக்குள்ளானது.  இதனை தொடர்ந்து இந்த வரும் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்வயர்கள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. மேலும் காவல்துறை சார்பில் உதவி ஆணையர் ரவி ஆய்வாளர் லிங்கபாண்டியன் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad