• சற்று முன்

    பானி பூரி தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து; அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது*

    மதுரை வடக்கு மாசி வீதி சப்பாணி கோயில் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மைபால் சிங் பாணி பூரி குடோன் வைத்து அங்கிருந்து பாணி பூரிகளை தயார் செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தார்.


    இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த 30,000 ரூபாய் மதிப்பிலான பாணி பூரி உள்ளிட்ட சரக்குகள் எரிந்து நாசமாயின. குடோனில் தீப்பிடித்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு தீயினை அணைத்ததால் பெரும் உயிர்  சேதம் தவிர்க்கப்பட்டது.இது இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad