திருமங்கலம் அருகே 7 பேர் வகையறா கொண்ட திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டி தரிசனம்
திருமங்கலம் அருகே 7 பேர் வகையறா கொண்ட திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டி தரிசனம் - நாக்கில் அலகு குத்தியும், உடலைச் சுற்றி அக்னி விளக்குகள் ஏந்தியும் பக்தர்கள் சுமந்துவந்து , சுவாமிகளை சப்பரத்தில் நகர் வரும் எடுத்துச் சென்று தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஏழு பேர் வகையறா கொண்ட ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த பழமையான திருக்கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டு, இன்று இரவு சாத்தங்குடி , உரப்பனூர், கரடிக்கல், உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த இக்கிராம குடும்பத்தினர் அனைவரும் இத்திருவிழாவில் ஒன்று கூடி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டில் சில்வர்குடம் மற்றும் பாத்திரங்களில் சுவாமியை வேண்டி மாவு விளக்கு எடுத்து வந்து , ஆண்களும், பெண்களும் திருக்கோயிலில் தாங்கள் நினைத்த காரியம் வேண்டி தரிசனம் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுவாமிகளை நகர் வீதியில் சப்பரத்தில் எடுத்து செல்வதற்கு முன்னதாக, பக்தர்கள் இருவர் தனது நாக்கில் அலகு குத்தியும், உடலை சுற்றி அக்கினி விளக்குகள் ஏந்தியவாறு கிராமத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று திருக்கோயிலை அடைந்தனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கிராமமே மனிதத் தலைகளாக காட்சி அளித்தன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை