Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி நகர் மன்ற அவசரக் கூட்டம் - குடிநீர்,வாறுகால் பணிகளை நகராட்சி நிர்வாகம் சரிவர மேற்கொள்ளவில்லை திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் மாறி மாறி குற்றச்சாட்டு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற கூடத்தில் வைத்து  அவசர ஆலோசனை  கூட்டம் நகர் மன்ற தலைவர் கருணாநிதி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் 36 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய 27 வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜோதிபாசு (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) சரிவர வாருகால் பணிகளை மேற்கொள்ளாததால் மழைக்காலங்களில் கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து சாலைகளில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கூட்டத்தில் பேசினர்.. பின்னர் 35 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ( திமுக)ஏஞ்சலா ஜோதி நகர் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனவும் அவ்வப்போது வழங்கப்படும் குடிநீரோடு சாக்கடை நீர் கலந்து வருவதாகவும் திமுக நகர மன்ற உறுப்பினர்.. குற்றச்சாட்டு வைத்தனர்.. கூட்டணி கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு வைத்தாதல் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad