இராஜபாளையம் அருகே ஒன்னரை வயது குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பரமேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் ஒன்றரை வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளது
இன்று உயிரிழந்த குழந்தை முத்துலட்சுமி தாயார் மாரீஸ்வரி துணி துவைத்து துணியை வீட்டின் மொட்டை மாடியில் காய போட சென்ற பொழுது வீட்டில் கீழே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று வீட்டில் வைத்திருந்த பிளாஸ்டிக் தண்ணீர் நிரப்பும் ட்ரம்மில் சிறிய ஸ்டூலில் ஏறி எட்டிப் பார்த்தபோது தொட்டில் தவறி விழுந்து உயிரிழப்பு இது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
உயிரிழந்த குழந்தை உடலை இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேதா பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை