• சற்று முன்

    பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கவிதா சிவக்குமார் ஒரு ஆண்டு நிறைவடைந்தையொட்டி பிரசவத்துக்கு ஆட்டோ மற்றும் சொர்க்க ரதம் இலவசமாக வழங்கியுள்ளார்

    வேலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கவிதா சிவக்குமார்  தலைவராக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்தையொட்டி தனது ஊராட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான  பிரசவத்துக்கு ஆட்டோ மற்றும்  சொர்க்க ரதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதனை மக்களுக்கு வழங்கியுள்ளார்..எம்.ஜி.ஆர்.நகரில் கழிவுநீர் கால்வாய்  ஜல் சக்தி அபியான் திட்டத்தில் அனைத்து குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வவாக் குட்டை கிராமத்தில் 40 ஆண்டுகளாக குடிநீர் கேட்டு மக்கள் போராடி வந்திருந்த நிலையில் . அந்தப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் சிறுவிசை பம்ப் மோட்டார் அமைத்து குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகவே இந்த ஆட்சியில்தீர்த்துள்ளோம் என்று பெருமிதமாக கூறினார். 

    அரசு நடத்திய முகாமில் ஜி.ஆர்.பாளையத்தைசேர்ந்த 50 நபர்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்துள்ளதாகவும். மேலும் ஊராட்சியின் நிதி வசதிக்கேற்றவாறு கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காணுவதில் தனி கவனம் செலுத்துவேன் என்று தலைவர் எஸ்.கவிதாசிவக்குமார் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad