Header Ads

  • சற்று முன்

    அறம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

    அறம் அறக்கட்டளை சார்பில் அறம் சாதனையாளர் விருதுகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வில்  மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு அறம் சாதனையாளர் விருதுகள் மற்றும் ரூபாய் 30,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை 7_மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கும்,  மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மார்களுக்கு இரண்டு தையல் இயந்திரங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அணிகலன்கள் மற்றும் தீபாவளி  இனிப்பு, புத்தாடைகள் 100 நபர்களுக்கம் வழங்கி சிறப்புரை ஆற்றினார் அவருடன் தெற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சரவணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். 

    மேலும் அறம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சர்வதேச தடகள வீரர் எஸ்.குருநாதன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். அறம் அறக்கட்டளை தலைவர் எம்.திருநாகலிங்கம் மற்றும் லில்லி கிரேஸ் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்கள், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர்  சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் எஸ்.பூபதி அவர்கள் மற்றும் சமூக சேவகர் திருமதி P.சங்கீதா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து தொகுத்து வழங்கினார்கள் மேலும் தேசிய மாற்றுத்திறனாளிகள் இளைஞர் மன்ற தலைவர் க.முத்துமகேஸ்வரன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

    அறம் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது_2022 பெற்றவர்களின் பெயர் பட்டியல் *இந்திய வழக்கறிஞர் சங்கர் செயலாளர் திரு.கு.சாமிதுரை அவர்கள், *திருச்சி மாவட்ட டி.எஸ்.பி கே.லில்லிகிரேஸ் அவர்கள், *தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் *மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பூபதி அவர்கள், *பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு அவர்கள், *மதுரை மாவட்ட துணை ஆட்சியர் வி.முருகானந்தம் அவர்கள்,

    *மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு ரவிச்சந்திரன் அவர்கள், *தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனைவர் பா.சிம்மச்சந்திரன் அவர்கள், *சர்வதேச தடகள வீரர் மற்றும் நிறுவனர் அறம் அறக்கட்டளை முனைவர் எஸ்.குருநாதன் அவர்கள், *அறம் அறக்கட்டளை தலைவர் எம்.திருநாகலிங்கம் அவர்கள், *சங்கீதா கேட்டரிங் & கிறிஸ்டல் சோசியோ கேர் மேனேஜிங் டைரக்டர் முனைவர் எஸ்.ஜெகன் அவர்கள், *கிரிஸ்டல் சோசியோ கேர் மேனேஜ்மென்ட் டைரக்டர் திரு.T.A.A.முகமது உமர் அவர்கள், *லைன்ஸ் கிளப் ஆப் மதுரை கோல்டன் ஜூபிலி தலைவர் எம்.ராமதாஸ் அவர்கள், *அறம் அறக்கட்டளை துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் அவர்கள், *சர்வதேச தடகளப் பயிற்சியாளர் திரு J.ரஞ்சித்குமார் அவர்கள், *குரு பிரபா சிறப்பு பள்ளி மேனேஜிங் டிரஸ்ட் எஸ்.விக்னேஷ் அவர்கள், *பெண்கள் மற்றும் குழந்தைகள் நல டிரஸ்ட் நிறுவனர் எஸ்.மூர்த்தி அவர்கள், *இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள், *நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன் அவர்கள், *காந்தி அருங்காட்சியக செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் அவர்கள் பாரதி கண்ட புதுமை பெண்கள் விருது பெற்றவர்கள் *ஜி.எம்.எஸ் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர்.ராஜகுமாரி ஜீவகன் அவர்கள், *மதுரை மகளிர் தொண்டு நிறுவனம் தலைவர் திருமதி.சாவித்திரி தேவதாஸ் அவர்கள்,*ஹர்ஷிதா நியூரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவர் இளம்தளிர் அவர்கள், *சமூக சேவகர் பி.சங்கீதா அவர்கள், *பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் ஜே.அனந்தவல்லி அவர்கள், *யு.கேன் பவுண்டேஷன் நிறுவனர் முனைவர் I.அகிபாசுபாஷினி அவர்கள், *ஹாக்கி மற்றும் கபடி தேசிய வீராங்கனை C.எஸ்தர்ராணி  உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad