Header Ads

  • சற்று முன்

    பனை விதைக்கும் விழிப்புணர்வு பயிற்சியுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

    பனை விதைக்கும் விழிப்புணர்வு பயிற்சியுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சக்கிமங்களம் எல்கேபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பனை விதைக்கும் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலையில் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாணவ மாணவிகளுக்கு  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கி பேசினார். 



    பின்னர் அவர் மாணவ மாணவிகளிடம் 200 பனைவிதைகளை வழங்க அதை அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆர்வமுடன் நடவு செய்தனர். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை வழிநடத்தினர். பசுமை பணியில் பங்கேற்ற அனைவருக்கும் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.  நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், அய்யாவு ஆகியோர் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய வழிகாட்டி மணிகண்டன் மற்றும் பங்கேற்ற சமூக ஆர்வலர்களுக்கு பள்ளியின் சார்பில் மாணவ மாணவிகள் கரங்களால் புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad