Header Ads

  • சற்று முன்

    கள்ளிக்குடியில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

    கள்ளிக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பாக பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமை வைத்தார்கள் இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்  ச.கு சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று பண்டிகை காலங்களில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்கள்.

    பட்டாசுகள் வெடிக்கும் போது செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு சீட்டு அளிக்கப்பட்டது பட்டாசுகளை வெடிக்க செய்யும்போது அருகில் மணல் வாளி தண்ணீர் வாளிவைத்திருக்க வேண்டும் எனவும் நீண்ட பத்திகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது பெற்றோர்கள் பாதுகாப்பில் தான் பட்டாசுகள்வெடித்து விபத்தில்லா  தீபாவளிபண்டிகைகொண்டாட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad