Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம்,காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

    வேலூர் மாவட்டம்,காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் பள்ளித்தலைமையாசிரியை கோ.சரளா தலைமையில் உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிகின்றேன்.  சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசந்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.  எனது நாட்டின் உள் பாதுகாப்ப்னை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதி மொழி ஏற்றனர்.

    நிகழ்வில் பள்ளியில் உள்ள 1700 மாணவிகளும் 60ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad