Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே உடல் நல குறைவால் மறைந்த தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன் என்ற மகனும் சாரு நிலா என்ற மகளும் உள்ளனர். சூரிய தீபன் என்ற புனைப்பெயரில்  பல்வேறு சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை சமூக அக்கறையுடனான படைப்புகளாக எழுதியுள்ளார். 

    சமத்துவ தீரா வாசம், விதைகள் உறங்குவதில்லை, மக்களே போல் மரணத்துள் வாழ்வு, அழகின் சிரிப்பு, எழுதிய கை, கதைகள், அவர்களை கைது செய்,- விஷக்கடி, குடிப்பெயர்வு, மகன், தடயம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார். மேலும், தனது மாணவ பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் இருந்துள்ளார்.

    இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த செயப்பிரகாசம் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த இவர், விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (அக்.23) திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து இவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மறைந்த எழுத்தாளர் செயப்பிரகாசம் விருப்பப்படி அவரது உடலை குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad