தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்து நபர் கைது
மதுரை கீரைத்துறை காவல் எல்லைக்குட்பட்ட கோதண்ட ராமர் மில் பகுதியில் காளிமுத்து என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்த கீரைத்துறை துணை ஆய்வாளர் .சந்தான போஸ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளானது அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது காளிமுத்துவை கைது செய்த போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் எங்கிருந்து வந்தது யார் சப்ளை செய்கிறார்கள் என அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை