தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நடிகர் சங்க அலுவலகத்தில் சங்க பொதுச்செயலாளர் C.M.வினோத் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், சங்கத் தலைவர் ஜப்பார், அப்பா பாலாஜி ஆகியோர் முன்னிலையில் பிதாமகன் அய்யர் சிறப்பு பூஜை செய்தார். விழாவில் S.வெங்கட், துணைச் செயலாளர் மதுர பாலா, தங்கப்பாண்டி, நாகராஜ், டான் கார்த்திக், நாகராஜ், சுகுமார், குணா, சத்யா, காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை சங்க மேலாளர் பாலா, செய்தித் தொடர்பாளர் நாட்டி நவனி செய்தார்கள். அனைவருக்கும் பயறு வகைகள், பழங்கள், பொரி, கடலை வழங்கப்பட்டன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை