Header Ads

  • சற்று முன்

    "ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக 5 மணி நேரத்தில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு சாதனை

     உலகிலேயே முதன்முறையாக 5 மணி நேரத்தில் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு ராணிப்பேட்டை மாவட்டம் 4 சாதனைகளில் இடம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டைமாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 288 கிராமஊராட்சிகளில் 880 இடங்களில் 5 மணி நேரத்திற்க்குள் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனைவிதைகளை நட்டு 4 சாதனைகள் படைத்தமைக்காக ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 4 உலக சாதனை அமைப்பினரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅமைச்சர் ஆர்.காந்தி அவர்களும் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன்,அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

    இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை .தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம் திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுக்குள் பசுமை பரப்பினை 33சதவீதமாக உயர்த்திட மரம் நடும் திட்டத்தினைதொடங்கிவைத்தார்கள்.இதன் கீழ் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட பனைவிதைகள் நடும் பணி இன்று மாவட்டம் முழுவதும்நடைபெற்றது. பாரம்பரிய பனை மரங்கள் நிலத்தடிநீரைசேமித்து வறட்சி காலத்தில் உதவியாக இருக்கும்.பனை மரத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த உலக சாதனையானது ஒன்றியக் குழு தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துறைச்சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 27 இலட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நமது மாவட்டத்தில் மட்டும் இன்று 52 இலட்சத்து 82 ஆயிரம் பனை  விதைகள் நடப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலுள்ள பனைமரங்களைவிட இரண்டு மடங்கு பனைமரங்கள் நமது மாவட்டத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது நம் அனைவரும் ஒன்றுபட்டு கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டதால் கிடைத்த வெற்றியாகும். முயற்சி செய்தால் நடக்காததுஎதுவுமில்லை என்பதற்கு இதுவே உதாரணம். 

    இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பேசினார்கள். 

    நாம் வாழ்கின்ற பூமிக் கும்தமிழர்களின் தேசிய மரம் பனைமரம். பனைமரத்தினைப் போல் நாம் வாழ்கின்ற மண்ணிற்கு நன்மைசெய்யும் மரம் வேறு எதுவும் இல்லை. நமது தமிழர்களின் அன்றாட வாழ்வியலுடன் ஒன்றாக இருந்த பனைமரம் பல்வேறுமருத்துவ குணங்களைஉடையது. மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடிநீரை பாதுகாத்து, அதனை சுத்திகரித்து, பசுமையையும் அதிகரிக்கும் சிறப்பு கொண்டது பனைமரம். அழிந்துவரும் பனைமரங்களைப் பாதுகாத்து மண்ணிற்கும், மனிதர்களுக்கும் நன்மையைக் கொடுக்க வேண்டும் என்பது நமது தமிழகமுதல்வரின் தொலை நோக்குத் திட்டமாகும்.அதன்படி பனை மரங்கள் நடும் திட்டம் தமிழகம் முழுக்க விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.அதன் தொடர்சியாக பனை விதைகள் நடும் திட்டத்தின் செயல்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்டத்திலும், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், அவர்களும் துவக்கினார்கள்.கடந்த 3 மாதங்களாக ராணிப்பேட்டை மாவட்ட திட்டஇயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி (வளர்ச்சி) அவர்களின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA - District Rural Development Agency) இதற்கான திட்டங்களைத் தீட்டியது.

    இந்த மகத்தான உலக சாதனை முயற்சியை தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைஅமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் துவக்கி வைத்தார்கள். அக்டோபர் 3, 2022 இன்று ஒரே நாளில் காலை 8.01 மணி முதல் மதியம் 1.00 மணிக்குள் 5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 288 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 7 வட்டாரங்களில் மொத்தம் 880 இடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 80 ஆயிரம் நபர்களை ஈடுபடுத்தி 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு வைத்தனர்,

    இந்நிகழ்ச்சியில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடிகேட்டர் அமீத்.ஹிங்க்ரோனி அவர்கள், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் மருத்துவர்.செந்தில் குமார், சீனியர் அட்ஜுடிகேட்டர் சிவக்குமரன் மற்றும் அட்ஜுடிகேட்டர் முனைவர் சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் மூத்தசாதனைப் பதிவுமேலாளர் ஜெகன்நாதன், அஸிஸ்டண்ட் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் வெங்கடேஸ்வரன், மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (நிறுவனத்தின் பதிவு மேளாளர் முனைவர் பா.பாலசுப்ரமணியன், ஆய்வு பயிற்சியாளர்.நாகஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஷ்வரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, உலக சாதனை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பிரதீப்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad