காரைக்குடியில் பொன் மகள் தங்க நகை திட்டம் விழா
காரைக்குடியில் அழகர் மெஸ் மாடியில் அக்ரோ டெக் நிதி நிறுவன அலுவலகத்தில் 14.10.2022 அன்று பொன் மகள் தங்க நகை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. பெண்களுக்கான பிரத்தியோகமாக இத் திட்டம் கொண்டுவரப்பட்டது. சாமானியகளின் பெண் பிள்ளை பெற்றோருக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.
இத் திட்டத்தை காரைக்குடி அரசு மருத்துவர் Dr.திரு.அருள்தாஸ் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க அணிகலன்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி SS. ரமேஷ், முனைவர் பாண்டி, டைரக்டர் பழனி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.இத் திட்டம் பற்றி டைரக்டர்களில் ஒருவருமான A.R. ஷண்முக சுந்தரம் அவர்கள் கூறும்போது பொதுவாக எல்லா தங்க நகை நிறுவனங்களும் பணத்தை முன்பே தவணைகளாக பெற்றுக்கொண்டு, தங்க ஆபரணங்கள் வழங்கப்படுகின்ற வழக்கத்திற்கு மாறாக போன் மகள் தங்க நகை திட்டத்தில் முதலில் பயனாளிகளுக்கு முன்கூட்டியே தங்க நகைகளை கொடுத்துவிட்டு, பின்னர் பிரதி வாரம் பணத்தை பெற்றுக்கொள்கிறோம். இத் திட்டம் தங்கம் விலைஅதிகரித்தாலும் பயனாளிகளுக்கு நிலையான சொத்தாக அமைந்து, தங்கம் வாங்கும் ஏழைகளின் கனவு நனவாகும் என்றார். இறுதியில் திரு பழனி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை