• சற்று முன்

    மதுரை காளவாசல் சந்திப்பில் காரில் மறைத்து வைத்திருந்த கஞ்சா ஆயிலை கைப்பற்றிய போலீசார்

    மதுரை காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தினர், அதில் மூன்று இளைஞர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர் என்பதை போலீசார் போலீசாருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்ட போது வாகனத்தில் மரத்தை வைத்திருந்த  அரசால் தடை செய்யப்பட்ட 230கிராம் கஞ்சா ஆயில் மூன்று சிறிய டப்பாவில் இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து மூன்று பேரையும் மதுரை கரிமேடு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் தொடர்ந்து கரிமேடு போலீசார் மூன்று பேரிடமும் மேற்கண்ட விசாரணையில் அவர்கள், மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த மார்ட்டின், ஆத்துக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பேங்க் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கரிமேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருச்சியை சேர்ந்த சரண் என்பவர் தங்களது காரில் கஞ்சா ஆயிலை மறைத்து வைத்ததாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து போலீசார் கார் மற்றும் கஞ்சா இலை பறிமுதல் செய்து  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad