Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 24,800 பணம் பறிமுதல்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அறையில் காண்ட்ராக்டர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கைமாற்றப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தளவாய், பாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த கோவில்பட்டி உதவி நிர்வாக செயற்பொறியாளர் ராஜரத்தினம் கயத்தார் உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் புதூர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் ஜேசுராஜ் இளநிலை வரைபட அலுவலர் காமராஜ் ஆகியோரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூபாய்  24,800 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad