மதுரை மாவட்டம்.வாடிப்பட்டியில் தனியார் நிறுவன மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனியார் நிறுவனமேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டிச்சேரி திருகண்ணூர் வணிகர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் இவரது மகன் சதீஷ் (வயது 35) விளையாட்டு உபகரண பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆனந்தி (வயது 34) என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சதீஷ் கடந்த 5 ந் தேதி மதுரையில் உள்ள நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பின் வாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து நண்பருடன் தங்கினார்.
கடந்த 6ந்தேதி மதியம் 12 மணியளவில் நண்பர்கள் புறப்பட்டு சென்றனர். சதீஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.அன்று மாலை.6.30 மணி அளவில் நண்பர்களில் ஒருவரான கார்த்திக் என்பவர் புரோட்டா வாங்கிக் கொண்டு ஹோட்டல் அறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். கதவு திறக்காததால் ஹோட்டல் ஊழியர்களிடம் தகவல் சொல்லிதாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சதீஷ் மின்விசிறியில் வெள்ளை நிற பெட்சீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்ய பிரியா, சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் சதீஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை எவ்வாறு சரி செய்ய போகிறேன் என்று அடிக்கடி புலம்பியாதகவும் தனது கணவருக்கு மனைவி ஆனந்தி ஆறுதல் கூறி வந்ததாகவும் கம்பெனி நஷ்டத்தால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என சந்தேகித்து விசாரணை செய்து தரும்படி மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி.போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை