Header Ads

  • சற்று முன்

    சதுரகிரி மலையில் காட்டுத்தீ..., பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை.....

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். சதுரகிரிமலை 

    கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் சதுரகிரிமலைப் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம். சதுரகிரிமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 தினங்களில் காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டால், வரும் 9ம் தேதி (ஞாயிறு கிழமை) புரட்டாசி மாத பௌர்ணமி பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வளர்பிறை பிரதோஷம் நாளில், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க முடியாத நிலை பக்தர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. காட்டுத்தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, பௌர்ணமியன்று சுவாமியை தரிசிக்கலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad