Header Ads

  • சற்று முன்

    அச்சம் தவிர் அறக்கட்டளையும் சத்ரிய பிலிம் டெக்னாலாஜியும் இணைந்து நடத்திய விருதுகள் வழங்கும் விழா

    அச்சம் தவிர் அறக்கட்டளையும் சத்ரிய பிலிம் டெக்னாலாஜியும் இணைந்து நடத்திய விருதுகள் வழங்கும் விழாவில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆற்றிய பணிகளை பாராட்டி இந்திய அரசின் எக்கு(steel)  துறையின் தேசிய இயக்குநர் ஜி.ராமசாமி அவர்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். வேலூரில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு முன்னதாக அறக்கட்டளையின் இயக்குநர் ஜெயஶ்ரீ வரவேற்று பேசினார்.  வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராம்மூர்த்தி, வேலூர் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வை.நடனசிகாமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராட்டினர்.

    இந்த விழாவில் வேலூர், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளையின் அவைத்தலைவரும், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன்  ஆற்றிவரும் கல்வி மற்றும் சமூக சேவைகளை பாராட்டி இந்திய அரசின் எக்கு(steel)  துறையின் தேசிய இயக்குநர் ஜி.ராமசாமி அவர்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  இந்த நிகழ்வில் வேலூர் ஶ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் துணைத்தலைவர் என்.ஜனார்த்தனம், ரோட்டரி சங்க தலைவர் ஜோசப்அன்ணையா, காட்பாடி துளிர் பள்ளியின் தலைமையாசிரியை த.கனகா, தன்னார்வலர்கள் செ.ஜ.சோமசுந்தரம், செ.ஜ.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad