Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்தனர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜபாண்டி (41). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரணி செல்வி (39). இவர் லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா மகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர். பெருமாள் நகரில் புதிதாக வீடு கட்டி வந்த ராஜபாண்டி கடந்த ஜூலை மாதம் தான் புது வீட்டில் குடியேறி உள்ளார். வீடு கட்டுவதில் அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது வீட்டில் தனது மனைவியிடம் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை 4 மணி வரை லாயல் மில் காலனியில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் கணவன் மனைவி இருவரும் இருந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களது குழந்தைகள் வந்தவுடன் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் வைத்து இருவருக்கும் கடன் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு அவரது மகன் மனோஜ் குமார் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்ததால், அவர் கதவை தட்டி பார்த்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்தவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். இதில் பரணி செல்வி கழுத்தை அறுக்கப்பட்ட நிலையிலும், ராஜபாண்டிக்கு கழுத்தில் கத்திக்குத்து விழுந்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். 



    இதையடுத்து இருவரது சடலங்களையும் மீட்டு கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து டிஎஸ்பி வெங்கடேஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடன் தொல்லை காரணமாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு உயிரிழந்தார்களா அல்லது தகராறில் ராஜபாண்டி தனது மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad