சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளில் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர். இன்று காலை, நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குழுவினர் நமஸ்கரித்தான்பட்டி, மானகசேரி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை பத்திரமாக மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் மழை காலங்களில் நீர் நிலைகளில் ஆபத்தான வகைகளில் விளையாட வேண்டாம் என்று அந்தப்பகுதி மக்களிடம் வலியுறுத்தி கூறினர்.
நீர் நிலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்பார்கள் என்று கூறினர். தொடர்ந்து சிவகாசியின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை