மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வை திரும்ப பெறக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை (புறநகர்) தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி - மாணவரணி திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி , தலைமையில், இளைஞரணி மாணவரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை