கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்தில் பட்டாசு வெடித்து சேதமாக்கிய வாலிபர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவில் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் அலுவலகத்திலுள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பஞ். தலைவர் கணபதி கயத்தார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கயத்தாறு போலீசார் கொம்பையா மகன் மாரிசெல்வம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை