Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன்  இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு ஆன்லைனில் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது தமிழகத்தில் தடை செய்யப்படுவதற்கு முன் ஆன்லைன் ரம்மியில் விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்த பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாகவே இருந்துள்ளார்.இதனால் பூபதிராஜாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த பூபதி ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இ ந்த நிலையில் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த  பூபதி ராஜாவின் தந்தை ராம்லட்சுமணன் வீட்டின் முன்புற கதவை திறந்து பார்த்தபோது பூபதிராஜா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் பூபதிராஜா பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து தகவலின் பெயரில் வந்த குளத்தூர் போலீசார் உடலை விட்டு பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad