Header Ads

  • சற்று முன்

    பள்ளத்தில் பதிந்த ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி

    மதுரை காளவாசல் பைபாஸ் சாலை அமைந்துள்ள மத்திய நுகர்பொருள் வாணிபக் கிடங்கு இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளை செய்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று மாலை கொண்டு வெளியே வந்து கொண்டிருந்த பொழுது குடிநீர் குழாய்க்காக பதிக்கப்பட்டு வருகிறார்கள் இதில் பைபாஸ் சாலை முழுவதும் குலிகள் தோண்டப்பட்டு வருகிறார்கள் சில இடங்களில் அரைகுறையாக மூடி போதிய பாதுகாப்பு இல்லாத முறையில் உள்ளது. 

    இந்த நிலையில் இன்று மாலை ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் மாட்டிக் கொண்டது இதை எவ்வளவோ எடுக்க முயன்றும் எடுக்க முடியவில்லை. உடனடியாக அருகில் உள்ள க்ரைன் மூலமாக லாரியை சுமார் 2 மணி நேரம் போராடி வெளியே எடுத்தனர் மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு இல்லாத முறையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு தடுப்புகள் அமைக்காமல் இருப்பது மேலும் விபத்துகளுக்கு வகை வளர்க்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் முறையாக பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து விபத்துக்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad