கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு
மதுரை மாவட்டம், பாண்டிகோயில் அருகே உள்ள கருப்பாயூரணி MP மஹாலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 21 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 21 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததோடு, மனுவாகவும் வழங்கினர். தொடர்ந்து,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரமான இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். அந்த வகையில், மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகள், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகள் என மொத்தம் 21 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். குறிப்பாக விடுபட்ட பகுதிகளுகளில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, இக்கூட்டத்தில் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இப்பகுதிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைத்திட பொதுமக்களுடன் ஒன்றிணைந்து போராடினேன். தற்போது தளபதியார் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அமைச்சர் பொறுப்பு தந்து மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் சேவையாற்ற நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி (மதுரை வடக்கு) வெங்கடேசன் (சோழவந்தான்) பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் , மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலாநிதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை