டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் திருவுருவ படத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாமை நடைபெற்றது.ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் கமலஹாசன், பூவேஸ்வரி, தேவசேனா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிச்சாமி,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராமர்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அழகர்சாமி, மனோகரன், பழனி முருகன், முருகன், கோபி, பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை