மதுரையில் ஹால் மார்க் முத்திரை பதிவிக்காக கொண்டு வரப்பட்ட 87 பவுன் தங்க நகைகள் திருட்டு; போலீசார்விசாரணை
தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 54) என்பவர் தேனியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை மூலம் விற்கப்படும் நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை பதிவு செய்வதற்காக மதுரைக்கு அடிக்கடி வருவது வழக்கம். இதற்காக சுமார் 87 பவுன் (697.610 கிராம்) நகைகளுடன் தனது காரில் மதுரை வந்தார். இந்தநிலையில் மதுரை அருகே அரசரடி அருகிலுள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ராஜகோபால், கடையின் மேலாளர் சையது ஆகியோருடன் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, காரில் இருந்து 87 பவுன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக எஸ்எஸ். காலனி போலீஸில் செந்தில்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கார் ஓட்டுநர், நகைக் கடை மேலாளரிடமும் உள்ளிட்டோரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை