கோவில்பட்டி அருகே ராஜுநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜு நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாண்டரமங்கலம் பஞ்சாயத்து தலைவி கவிதா அன்புராஜ் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீரை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,நகர மன்ற உறுப்பினர் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி, முருகன், பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை