விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்... மாவட்ட எஸ்.பி. உத்தரவு..
விருதுநகரில் நாளை 15ம் தேதி, திமுக கட்சியின் முப்பெரும் விழா நடைபெறகிறது. இதனை முன்னிட்டு விருதுநகரில் போக்குவரத்துகள் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இருந்து கோவில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில், இடது பக்கமாக சென்று ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல் பகுதியிலிருந்து கோவில்பட்டி செல்லும் வாகனங்கள், கப்பலூர் பாலத்திலிருந்து இடது புறம் திரும்பி மதுரை ரிங்ரோடு, அருப்புக்கோட்டை சாலை, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம் வழியாக கோவில்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டும். கோவில்பட்டி பகுதியிலிருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்கள் வெங்கடாசலபுரம் போலீஸ் சோதனைச்சாவடி வழியாக மேட்டமலை, மீனம்பட்டி, சிவகாசி, புறவழிச்சாலை வழியாக திரும்பி திருத்தங்கல், மத்தியசேனை, ஆமத்தூர் வழியாக நான்கு வழிச்சாலையில் திரும்பி மதுரைக்கு செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் செல்லும் வழிகள் குறித்து காவல்துறை கூறும் வழித்தடத்தில் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் காலை 8 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தகவல் வெளியிட்டுள்ளார்
.செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை