• சற்று முன்

    வேதிப்பொருள் தொழிற்சாலை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து வேதிப்பொருட்கள் தீயில் கருகி நாசம்..

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில்  தனியார் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான வேதிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் தீயில் கருகி நாசமானது. சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. 

    இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு பத்துக்கு மேற்பட்ட வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் மதிப்பிலான வேதிப்பொருட்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் தீயில் கருகி நாசமாயின மேலும் இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக  ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad