Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியநத்தம் கிராமத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அரசு உதவி பெறும்  தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 45 பள்ளி குழந்தைகள் பயின்று வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த சாமுவேல் துரை என்பவர் S.கைலாசபுரத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியரை திடீரென மாற்றம் செய்யப்பட்டது.ஏன் என்று கேள்வி எழுப்பி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பள்ளி முன்பு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்  தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி,ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலர் பவானிந்தி ஈஸ்வரன், ஆகியோர் தற்போது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பெற்றோர் கூறுகையில் தலைமையாசிரியரை மீண்டும்  அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    பெற்றோர்கள் கோரிக்கை ஏற்ற முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை ஆசிரியரை மீண்டும் பள்ளியில் பணியமர்த்தப்படும் என்று உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad